×

குமரியில் 52 ஆயிரம் மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகம் வினியோகம் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு

நாகர்கோவில், ஜன.3: அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. புத்தாண்டின் முதல் நாள் என்பதால் மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடைபெற்றது. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை காரணமாக அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் பெரும் பாதிப்படைந்தன. மழையால் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அரையாண்டு தேர்வு விடுமுறையும் ெதாடர்ச்சியாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2 பாடங்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்பட்டு, பள்ளிகள் மூடப்பட்டன. குமரி மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு கணித பாட தேர்வு மட்டும் நடைபெற வேண்டி இருந்தது.

இந்த நிலையில் அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் நேற்று (2ம் தேதி) திறக்கப்பட்டன. 2024ம் ஆண்டின் முதல் நாள் என்பதால், மாணவ, மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் வந்தனர். பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இனிப்புகளும் வழங்கப்பட்டன. காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவை மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் உட்கொண்டனர். நடைபெறாத தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான சுமார் 52 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 3ம் பருவ பாட புத்தகள் நேற்று பள்ளிகளில் வழங்கப்பட்டன. வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெராபின் பிளவர் குயின் , பாட புத்தகங்கள் வினியோகம் செய்தார்.

The post குமரியில் 52 ஆயிரம் மாணவர்களுக்கு 3ம் பருவ பாட புத்தகம் வினியோகம் அரையாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக மழை பெருஞ்சாணி...